என்னோட பொண்ணு நடிக்கவில்லை… ஜான்வி கபூர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போனிகபூர்.!

Default Image

ஜான்வி கபூர் தமிழில் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என அவருடைய தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் விளக்கம் கொடுத்துள்ளார். 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் சமீபகாலமாக உடல் எடையை குறைத்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியீட்டு வருகிறார். இதனை பார்த்த பலரும் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு தான் உடல் எடையை குறைத்து வருகிறார் என்று கூறினார்கள். அதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்வி கபூர் தமிழில் பையா 2 படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார் என தகவல்கள் பரவியது.

Janhvi Kapoor White Dress
Janhvi Kapoor White Dress [Image Source: Twitter]

அது மட்டுமின்றி, தனுஷிற்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக வதந்தி தகவல்  தீயாய் பரவியது. இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலை என ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், தயாரிப்பாளரும், நடிகை ஜான்வி கபூரின் தந்தையுமான போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

janhvi kapoor boney kapoor
janhvi kapoor boney kapoor [Image Source: Twitter ]

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது “அன்புள்ள ஊடக நண்பர்களே, பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ஜான்வி கபூர் தற்போது எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்” என வதந்தி தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதைப்போல, தயாரிப்பாளர் போனிகபூர் லவ் டுடே படத்தின் ரீமேக்கை கைப்பற்றியுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வதந்தி தகவல் பரவியது. அதற்கும் போனிகபூர் தான் லவ்டுடே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்