ஓசூரில் கைது செய்யப்பட்ட இளைஞரை தாக்கும் காவல்துறை உயர் அதிகாரி.! வீடியோ வெளியானதால் பரபரப்பு.!
கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், எருது விடும் போராட்டத்தில் எடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞரை லத்தியால் தாக்குவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்கவில்லை . அதனால் விழா நடக்க அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் பல மணிநேரம் நடைபெற்றதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தன. இதனால் போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததாக தெரிகிறது. அதன் பிறகு ஏற்பட்ட அசம்பாவிதத்தால் போராட்டகாரர்களை கலைக்க தண்ணீர் பீச்சியடித்து, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்தனர்.
போராட்டகாரர்களை கலைக்க சேலம் டிஐஜி மகேஷ்வரி தலைமையில் 300 போலீசார் சம்பவ பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சமபவம் தொடர்பாக தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
அதில் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், போராட்டத்தில் எடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞரை லத்தியால் தாக்குவது போலவும், பூட்ஸ் காலால் எட்டி உதைப்பது போலவும் அந்த வீடியோவில் காட்சி பதிவாகியுளளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது.
கிருஷ்ணகிரி எஸ் பி சரோஜ் குமார்க தாகூர் இளைஞர்களை தாக்கும் வீடியோ.@Veera284 pic.twitter.com/kCoI71jgCC
— Voice Of Savukku Shankar (@voiceofsavukku) February 2, 2023