#BREAKING : இபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை.!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில், தற்போது ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று டெல்லி சென்று திரும்பிய நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில், ஏபிஎஸ் தரப்பில் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்யபட இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்த நிலையில் வேட்புமனு தாக்கல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வம் இடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்து வரும் நிலையில் தற்போது அண்ணாமலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.