பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.!
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் . கடந்த சில நாட்களாகவே தங்கராஜ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .
இதனையடுத்து, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் காலமானார். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.