ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி போட்டியிடும் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி மாற்றம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதான காட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக போட்டியிட உள்ளது. ஈபிஎஸ் தரப்பில் தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும் போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், வேட்புமனு தாக்கல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.