இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார்! டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்பு.! விளக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரையடுத்து டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக பாஜக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் குறித்து, நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை டிஜிபி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியரான கிருஷ்ணன் உன்னியிடம் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
திமுக மற்றும் கூட்டணியினர் இடைத்தேர்தல் தொடர்பாக பணம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ள ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர், இந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரி சத்தியப்ரதா சாகு, டிஜிபி சைலேந்திர பாபு, மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆகியோரிடம் புகார் குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.