அமெரிக்காவின் மேல் பறந்த சீன உளவு பலூன்கள் – பென்டகன்.!
அமெரிக்காவின் பாதுகாப்பான இடங்களை உளவு பார்க்க சீன பலூன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான பாதுகாப்பு இடங்களின் மேலே சீனாவின் உளவு பலூன்கள் பறந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜோ பிடனின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் பலூனை கீழே சுடுவது குறித்து பரிசீலித்தனர், ஆனால் அவ்வாறு செய்வது தரையில் உள்ள பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முடிவு செய்ததாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த பலூன் அமெரிக்காவின் வடமேற்கில் பறந்து சென்றதாக அந்த அதிகாரி கூறினார், மேலும் இதன் நோக்கம் தெளிவாக கண்காணிப்பதைக் கொண்டிருந்தது. அந்த பலூனின் பறக்கும் பாதை பல முக்கிய பாதுகாக்கப்பட்ட இடங்களின்மேல் சென்று கொண்டிருந்தது. பலூன் அமெரிக்க வான்வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நுழைந்தது, அமெரிக்க உளவுத்துறை அதை நன்கு கண்காணித்து வருவதாகவும் ஆய்வு செய்ய ஜெட் விமானங்களும் பறக்கவிடப்பட்டன என்று அந்த அதிகாரி கூறினார்.
சீனா இதுபோல கடந்த காலங்களில் அமெரிக்காவிற்கு கண்காணிப்பு பலூன்களை அனுப்பியுள்ளது. இருப்பினும் வெளிநாட்டு உளவுத்துறை, அமெரிக்காவிடமிருந்து முக்கிய தகவல்களை சேகரிப்பதில் இருந்து பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்று அமெரிக்கா கூறியுள்ளது.