Breaking: கனமழை எதிரொலி; தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.!
கனமழை பெய்து வருவதால் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், மற்றும் நாகை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்திலும் மழையின் காரணமாக 1-8 ஆம் பகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறை உத்தரவை வழங்கியுள்ளனர்.