மீண்டும் பழைய பார்முக்கு வந்த ஜோப்ரா ஆர்ச்சர்; 6 விக்கெட்களை எடுத்து அசத்தல்.!

Default Image

மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சர், கெட்டதிலும் நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒருநாள் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை (6-40) தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கிம்பர்லே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீச, பேட்டிங் சேட்டை இங்கிலாந்து அணியில், மலான்(118 ரன்கள்) மற்றும் ஜாஸ் பட்லர்(131 ரன்கள்) ஆகியோரின் சதத்துடன் 50 ஓவர்களில் 346/7 ரன்கள் குவித்தது. 347 ரன்கள் வெற்றி இலக்காக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியை இங்கிலாந்து பவுலர்கள் 50 ஒவர்களும் முழுமையாக விளையாட விடாமல், 287 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அந்த அணி, 44 ஒவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சர், தனது பந்துவீச்சில் மிரட்டி விட்டார். ஒருநாள் போட்டிகளில் தனது முதல் 5+ விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் 9.1 வர்கள் வீசி வெறும் 40 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும் இது அவருக்கு சிறந்த ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாக அமைந்துள்ளது.

இதன் மூலம் தனது பழைய பார்முக்கு திரும்பியிருக்கிறார் ஆர்ச்சர். அவர் இந்த போட்டிக்கு பிறகு தனது ட்வீட்டில் கெட்டதிலும் நல்லதை எடுத்துக்கொள்ளவும் என பதிவிட்டிருக்கிறார். இவர் ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட்டார், இந்த வருட ஐபிஎல்-இல் எதிரணிக்கு இவர் மிரட்டலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்