இடைத்தேர்தலில் இதுவரை இன்றைய நிலவரம்.! திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தேர்தல் நெருங்க நெருங்க பரபரப்பாகி கொண்டே செல்கிறது. தற்போது வரை எந்தெந்த கட்சியினர் வேட்டபுமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரத்தை தற்போது பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்த பிறகு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே அறிவித்தது போல கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு மீதான பரிசீலனை வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எடுத்து பல்வேறு கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு அளித்த வண்ணம் இருக்கின்றனர். தேர்தல் அறிவித்த சில நாட்களில் பிரதான கட்சியின் முதல் வேட்பாளராக திமுக கூட்டணி சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அவர்களின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தேமுதிக சார்பில் வேட்பாளராக எஸ்.ஆனந்த் என்பவர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அடுத்து, அமமுக சார்பில் சிவபிரசாத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் நாவேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என்பவர் அறிவிக்கப்பட்டு அவர் நேற்று வேட்பமனு தாக்கல் செய்தார்.
அடுத்ததாக அனைவரும் பெரிதாக எதிர்பார்க்கும் எதிர்க்கட்சியான அதிமுக ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு பிரிவுகளாக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முன்னாள் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்து உள்ளார். அதேபோல ஓ.பன்னீர்செல்வம் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அறிவித்து உள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இன்னும் தங்களது நிலைப்பாட்டையும் தங்களது வேட்பாளரையும் அறிவிக்காமல் இருந்து வருகிறது. இன்றாவது தங்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.