எம்எஸ் தோனிக்கு பிறகு அந்த பொறுப்பு தன் மீது விழுந்தது – ஹர்திக் பாண்டியா

Default Image

எம்எஸ் தோனிக்கு பிறகு அந்த பொறுப்பு தன் மீது விழுந்துள்ளது என ஹர்டிக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

MSDhoni01

இந்திய அணியில் எம்எஸ்தோனி ஆற்றிய பங்கு என்பது யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. அணிக்கு கேப்டனாக இருந்த போதிலும், கேப்டன் பதவியில் இல்லாத போதிலும் அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியும் அவர் அணிக்காக தன்னை முழுதாக அர்ப்பணித்தார்.

vk msd advice

இந்திய டி-20 அணியின் தற்போதைய கேப்டன் ஹர்டிக் பாண்டியா, தற்போது எம்எஸ் தோனிக்கு பிறகு அந்த பொறுப்பு தன்மீது விழுந்துள்ளதாக கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆற்றிய அதே ரோலில் தானும் செயல்படுவதில் தனக்கு எந்த கவலையும் இல்லை, தோனியின் ரோலில் தான் விளையாடுவதற்கு பழகிவருவதாக தெரிவித்தார். மேலும் ஃபினிஷிங் ரோலில் விளையாடும் போது வரும் சவாலை ரசிப்பதாகவும் பாண்டியா கூறினார்.

விக்கெட்டுகளுக்கு இடையே அவரது ஓட்டம், ஸ்ட்ரைக் சுழற்சி மற்றும் ஆட்டத்தின் முடிவில் அதிரடியான ஷாட்களை விளையாடுவதில் தோனி எப்படி சிறப்பாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக தான் அதிக அனுபவத்தைப் பெற்றுள்ளதாகக் கூறிய பாண்டியா, அணிக்கு உதவ தனது ஸ்ட்ரைக்-ரேட்டை தியாகம் செய்யத் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தினார்.

Hardik sixes

நான் இளமையாக இருந்தபோது பந்தை மைதானத்தை சுற்றி அடித்தேன். தற்போது தோனி அணியில் இல்லை, தனக்கு பொறுப்பு கூடிவிட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை. அணிக்கு நான் இருக்கிறேன் என்பதற்கு சில உறுதியை கொடுக்க விரும்புகிறேன் என பாண்டியா கூறினார்.

நியூசிலாந்துக்கு எதிராக டி-20 தொடரை 2-1 என இந்தியா வெற்றி பெற்றதுடன், ஹர்டிக் பந்து வீச்சில் 4 விக்கெட்கள் மற்றும் பேட்டிங்கில் 30 ரன்கள் எடுத்து ஆல்ரவுண்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்த போட்டிக்கு பிறகு அவர் அளித்த பேட்டியில் ஹர்டிக் பாண்டியா இவ்வாறு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்