4ஜி, 5ஜி, லேண்ட்லைன் சேவைக்கு பிஎஸ்என்எல் ₹53,000 கோடி முதலீடு.!

Default Image

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி, 5ஜி, லேண்ட்லைன் சேவையை மேம்படுத்த ரூ.53,000 கோடி செலவிட உள்ளதாக மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Ashwini Vaishnaw

பிஎஸ்என்எல்:                                                                                                                    இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான அரசு நடத்தும் பிஎஸ்என்எல்(BSNL), இந்த ஆண்டு தனது நெட்வொர்க்கை 4ஜி மற்றும் 5ஜிக்கு மேம்படுத்தவும், நாடு முழுவதும் லேண்ட்லைன் நெட்வொர்க்கை சீரமைக்கவும் சுமார் ரூ.53,000 கோடியை பயன்படுத்த உள்ளதாக என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

2023-24 ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.52,937 கோடி மூலதனம் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. BSNL இன் முதலீடு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.1.64 லட்சம் கோடி மறுமலர்ச்சி தொகுப்பின் ஒரு பகுதி என்று வைஷ்ணவ் மேலும் கூறினார்.

BSNL 5g 5

பிஎஸ்என்எல் 5ஜி சேவை:                                                                                                                  புதிய டவர்களை நிறுவுதல், 2ஜி, 3ஜியில் இருந்து 4ஜி மற்றும் 5ஜிக்கு மேம்படுத்துதல், எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் லேண்ட்லைன் அமைப்புகளில் சீரமைப்பு ஆகியவை இந்த ஆண்டில் BSNL க்காக ரூ.53,000 கோடி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் என்று வைஷ்ணவ் கூறினார்.

nirmala2023

பட்ஜெட்டில் ஒதுக்கீடு:                                                                                                                    தபால் மற்றும் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு பட்ஜெட்டில், அரசு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.97,579.05 கோடியும், தபால் திட்டங்களுக்கு ரூ.25,814 கோடியும் இதில்  அடங்கும். மேலும் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அடிப்படையிலான நெட்வொர்க்கிற்கு ரூ.2,158 கோடியும், வடகிழக்கு மாநிலங்களில் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு ரூ.715.8 கோடியும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், பொறியியல் நிறுவனங்களில் 5G சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்