முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – ஆதார் கட்டாயம் : தமிழக அரசு
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைவோரும் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு.
மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள்,தங்களது ஆதார் எண்ணைஇணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசும் அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைவோரும் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.