பட்ஜெட் 2023-24இல் உலகம் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்புகள்… வெளியுறவு துறை அமைச்சர் விளக்கம்.!
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மத்திய பட்ஜெட் 2023 -2024இல் உலக நாடுகள் கவனிக்க வேண்டும் எனவும், அதற்கான முக்கிய அறிவிப்புகள் இவை தான் எனவும் சில முக்கிய அறிவிப்புகள் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் 2023 – 2024க்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் மீது பலவேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அதன்படி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த மத்திய பட்ஜெட்டை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் எனவும், அதற்கான முக்கிய அறிவிப்புகளை குறிப்பிட்டுள்ளார். அதில், உலகளாவிய வளர்ச்சியின் வலுவான இயந்திரமாக இந்தியா உள்ளது. மூலதன முதலீட்டு செலவு 33 சதவீதம் அதிகரித்து 10 டிரில்லியனாக உயர்ந்து உள்ளது என குறிப்பிட்டார்.
எளிதாக்கப்பட்ட KYC செயல்முறை : மேலும், வியாபாரம் செய்வதை எளிதாக்குதல் தொடர்பாக KYC செயல்முறையானது எளிமையாக்கப்பட்டுள்ளது. பொதுவான வணிக அடையாள அட்டையாக PAN கார்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரவு செயலாக்க மையம், உள்நாட்டு உற்பத்திக்கான மறைமுக வரி ஆதரவு, வருமான வரிச் சலுகை ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது எனவும்,
உட்கட்டமைப்பு வசதிகள் : 100 முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்கள், 50 கூடுதல் விமான இணைப்பு திட்டங்கள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுகான நிதி ஒதுக்கீடு, இதுவரை இல்லாத அளவு அதிகபட்ச ரயில்வே நிதி ஒதுக்கீடு என குறிப்பிட்டார்.
டிஜிட்டல் செயல்பாடுகளை ஊக்குவித்தல் : தேசிய தரவு கொள்கை நிறுவுதல், டிஜிட்டல் லாக்கர் நிறுவனத்தை உருவாக்குதல், AIக்கான சிறந்த மையங்கள், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைப்பது ஆகியவற்றை குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் : உணவு பொருள் உற்பத்திக்கு இந்தியாவை உலகளாவிய மையமாக்குதல், உணவுப்பொருள் சேமிப்பு திறனை அதிகப்படுத்துதல், கூட்டுறவுகளின் பங்களிப்பை ஊக்குவித்தல், விவசாயம் மற்றும் மீன்வளக் கடனை அதிகரித்தல், விவசாயத்திற்கு தேவையான நிதியை அதிகப்படுத்துதல், விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குதல்.எனவும்,
உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்தல் : Pharma R&Dயை மேம்படுத்துதல், மருத்துவ கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திக்கான மனிதவளத்தை உறுதி செய்தல், மேலும் மருத்துவ ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துதல், 157 புதிய நர்சிங் கல்லூரிகளை நிறுவுதல் எனவும்,
உலகளாவிய தொழிலாளர் தொகுப்பில் இந்திய பங்கு : தேசிய தொழிற்பயிற்சிக் கொள்கையின் ஆதரவுடன் திறன்கள் மற்றும் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், 4.7 மில்லியன் இளைஞர்களுக்கு உதவித்தொகை, 30 சரவதேச திறன் மையங்களை உருவாக்குதல்.
பசுமை வளர்ச்சி : ஆற்றல் மாற்றம் மற்றும் நிகர ஜீரோ முதலீடு , பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை மேம்படுத்துவது, பேட்டரி ESSக்கான VGF ஆதரவு மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை (LiFE) ஊக்குவித்தல்.
சுற்றுலா : இந்தியாவை சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக தயார்படுத்துதல். 50 இடங்களுக்கு டிஜிட்டல் ஆதரவுடன் முழுமையான சுற்றுலா தொகுப்பை உருவாக்க கவனம் செலுத்துங்கள் என மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட பல்வேறு அறிவிப்புகள் குறித்து உலக நாடுகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.