INDvsNZ T20: இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்.!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3-வது டி-20 போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங்.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி இன்று குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: ஷுப்மான் கில், இஷான் கிஷன் (W), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (C), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே (W), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (C), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்