தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

Default Image

தளபதி 67 பட பூஜை வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தளபதி 67

Thalapathy67
Thalapathy67

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. நடிகர் விஜய் நடித்து வரும் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

தளபதி 67 பூஜை

தளபதி 67 படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதுவரை அதற்கான வீடியோவை வெளியிடாமல் இருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பூஜையில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, அர்ஜுன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

தளபதி 67 பிரபலங்கள்

தளபதி 67 படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ்உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்