மத்திய பட்ஜெட் 2023-24 இன் கவனிக்க வேண்டிய அம்சங்கள்.!

Default Image

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்ற அவையில் தாக்கல் செய்த, 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டின் பல்வேறு முக்கிய அம்சங்கள்..

நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது, இது அமிர்த காலின் முதல் பட்ஜெட், மேலும் பொருளாதார வளர்ச்சியின் நோக்கத்தை விரிவுபடுத்துதல், உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளை மேம்படுத்துதல் மற்றும் வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் ஏழு முன்னுரிமைகள் கவனம் செலுத்தப்படும் என்று சீதாராமன் கூறினார். அவை உள்ளடக்கிய மேம்பாடு, கடைசி இலக்கை எட்டுவது, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, ஆற்றல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித் துறையை மேம்படுத்துவது. இந்த பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகளை இங்கு பார்க்கலாம்.

வருமான வரி:

  • வருமான வரிக்கான தள்ளுபடி வரம்பு, ஆண்டிற்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு.
  • ரூ 3 லட்சம் வரை – வரி இல்லை
  • ரூ 3-6 லட்சம் – 5% வரி
  • ரூ 6-9 லட்சம் – 10% வரி
  • ரூ 9-12 லட்சம் – 15% வரி
  • ரூ 12-15 லட்சம் – 20% வரி
  • 15 லட்சத்திற்கு மேல் – 30% வரி

விவசாயம்:

  • விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. (கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளம் ஆகியவற்றில் கவனம்)
  • மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் நலன்களுக்கு உதவும் வகையில் ரூ. 6,000 கோடி முதலீட்டில் புதிய திட்டம்.
  • 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய உதவி.

வீட்டுவசதி:

  • நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் வழங்கும் இந்திய அரசின், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66% சதவீதம் அதிகரித்து ரூ.79,000 கோடியாக உயர்வு.

கல்வி:

  • புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள்.
  • பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சிக்கான சிறந்த நிறுவனங்கள்.
  • குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம்.

ரயில்வே துறை – 2.40 லட்சம் கோடி:

  • இந்திய ரயில்வே பட்ஜெட்டுக்கான மொத்த செலவு ரூ.2.40 லட்சம் கோடி( இது 2013-14ஆம் ஆண்டு மொத்த செலவீனத்தை விட ஒன்பது மடங்கு அதிகம்).

சமூக நலம்:

  • பழங்குடியினரின் திறன் மேம்படுத்த பாதுகாப்பான வீடு, சுகாதாரம், குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு ரூ.15,000 கோடி திட்டம்.
  • இளைஞர்களுக்காக 30 “ஸ்கில் இந்தியா” மையங்கள்.

ஓய்வூதியம்:

  • மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு.

சுற்றுச்சூழல்:

  • எரிபொருள் தேவைகளைக் குறைக்க பசுமை ஹைட்ரஜன் திட்டம்.
  • ஆற்றல் மாற்றம் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு(Zero Emission) இலக்குகளுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிய “பசுமை கடன்” திட்டம்.

டிஜிட்டல் மயம்:

  • வணிகங்கள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு பாதுகாப்பான டிஜிலாக்கர்.
  • 5ஜி சேவைகளைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்க, பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள்.
  • இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான(AI ) ஆராய்ச்சிக்கு 3 மையங்கள்.

இயந்திரமயமாக்கல்:

  • நகரங்களில் கழிவுநீரை அகற்ற 100% இயந்திரங்கள் பயன்படுத்தல்.

பொதுஅடையாள ஆவணம்:

  • குறிப்பிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாள ஆவணமாக பான் அட்டை  பயன்படுத்தப்படும்.

கலால்/சுங்க வரி:

  • அடிப்படை சுங்க வரி 21 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைப்பு.
  • மொபைல் போன் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி சலுகை, மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு.
  • டிவி பேனல் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு.
  • சிகரெட்-க்கான வரி 16% வரை உயர்வு.

பொருளாதாரம்:

  • 2024 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதன முதலீட்டுச் செலவு 3.3%.
  • மத்திய அரசின் பயனுள்ள மூலதனச் செலவு ரூ.13.7 லட்சம் கோடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்