இன்று முதல் ஓலா, உபெர் டாக்ஸி சேவைகள் செயல்படாது.!

Default Image

இன்று முதல் கவுகாத்தியில் ஓலா, உபெர் டாக்ஸி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (பிப்ரவரி 1) முதல் உபெர்(Uber), ஓலா(Ola) மற்றும் ராபிடோ (Rapido) ஆகியவற்றின் ரைடு-ஹெய்லிங் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர்களால் வைக்கப்பட்ட தொடர் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையடுத்து, அசாம் கேப் மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து கவுகாத்தி பைக் மற்றும் டாக்ஸி யூனியன் ஆகியவற்றால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 18,000 வண்டி ஓட்டுநர்கள் மற்றும் 16,000 ரேபிடோ பைக் ரைடர்கள் சேவைகளை வழங்குவது நிறுத்தப்படுகிறது. அந்த பகுதிகளில் உள்ள ஓட்டுனர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அசாமில் கடந்த 2015 முதல் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன.

தொடக்கத்தில் நல்ல வரவேற்ப்பை தந்தன, ஆனால் பிற்காலத்தில் அவர்கள் ஓட்டுனர்களை துன்புறுத்த ஆரம்பித்தனர். ஒரு பயணத்திற்கு ஓட்டுநர்களிடமிருந்து 40 முதல் 60 சதவீதம் வரை கமிஷன் எடுக்க ஆரம்பித்தனர். இது நியாயமானதல்ல என்று அசாம் கேப் மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோதிஷ் டேகா கூறினார்.

நாங்கள் இவ்வளவு கமிஷன் கொடுத்தால், எங்களுக்கு எதுவும் மிச்சமிருக்காது, நாங்கள் 18-20 மணி நேரம் வேலை செய்கிறோம், மேலும் வாகனங்களுக்கு வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த வேண்டும், எங்களை பராமரிக்க வேண்டும். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

போராட்டங்களுக்கு இடையில் ஓட்டுநர்கள், டாக்ஸி சேவைக்கு புதிய ஆப் அறிமுகப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். கடந்த மாதம், ராபிடோ தனது அனைத்து பைக்-டாக்ஸி சேவைகளையும் மகாராஷ்டிராவில் நிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்