முதியோர் வைப்பு தொகை உச்சவரம்பு 30 லட்சமாக உயர்வு!
முதியோர் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச வைப்புத்தொகையை உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
முதியோர் சேமிப்பு திட்டத்தில் நிரந்தர வைப்புக்கான உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதுபோன்று சிறுசேமிப்புத் திட்டமான அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டத்தின் (POMIS) உச்ச வரம்பை உயர்த்தினார்.
அதன்படி, புதிய உச்ச வரம்பு ஒற்றைக் கணக்குக்கு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.9 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். டிசம்பர் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில், முதியோர் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) வட்டி விகிதத்தை அரசு 20 bps உயர்த்தி, ஆண்டுக்கு 7.4% லிருந்து 7.6% ஆக உயர்த்தியுள்ளது எனவும் நிதியமைச்சர் கூறினார்.