சிறுகுறு தொழில் தொடங்க 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.! நிதியமைச்சர் அறிவிப்பு.!
சிறு குறு , நடுத்தர தொழில்கள் தொடங்க, அவற்றை மேம்படுத்த கடன் உதவி அளிக்கப்படும் வகையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தில். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
ஆரம்பத்தில் மத்திய அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து 2023- 2024க்கான பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் , அதற்காக ஒதுக்கப்படும் நிதியினை பற்றியும் அறிவித்து வருகிறார்.
ஏற்கனவே சில முக்கிய திட்டங்களான, ரயில்வே , நர்சிங் கல்லூரிகள், வறட்சியை சமாளிக்க கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி, விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.75,000 கோடி என பல்வேறு திட்ட அறிவிப்புகளை தெரிவித்து வருகிறார்.
அடுத்ததாக, அனைவரும் எதிர்பார்த்தது போலவே, சிறு குறு , நடுத்தர தொழில்கள் தொடங்க, அவற்றை மேம்படுத்த கடன் உதவி அளிக்கப்படும் வகையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.