இந்த வருடம் தேர்தலை சந்திக்க உள்ள கர்நாடகாவுக்கு 5,300 கோடி சிறப்பு நிதி.! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.!
வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதிக்காகவும், விவசாயிகளுக்காகவும், கர்நாடக மாநிலத்திற்கு 5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய நாடாளுமன்றத்தில். நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
மத்திய அரசால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது 2023- 2024க்கான பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் , அதற்காக ஒதுக்கப்படும் நிதியினை பற்றியும் அறிவித்து வருகிறார்.
அதில், வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதிக்காகவும், விவசாயிகளுக்காகவும், கர்நாடக மாநிலத்திற்கு 5,300 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக அரசு ஆளும் கட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.