ரஷ்யாவிற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்..!-பெலாரஸ் ஜனாதிபதி
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு உதவ தயாராக இருப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகள் முன்வந்துள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸ் கூடுதல் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு தற்பொழுது எந்த உதவியும் தேவையில்லை என்று வலியுறுத்திய அலெக்சாண்டர் இருப்பினும் எங்கள் ரஷ்ய சகோதரர்களுக்கு உதவி தேவைப்பட்டால், உதவியை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஆனால் அவர் எத்தகைய உதவியை செய்ய உள்ளார் என்று கூறவில்லை.
பெலாரஸ், ரஷ்யாவின் படையெடுப்பின் போது ரஷ்யா படையின் ஒரு பகுதியை தனது பிரதேசத்தில் இருந்து நடத்த அனுமதித்தது மற்றும் உக்ரைனுக்குள் ரஷ்ய ஏவுகணைகளுக்கான ஏவுதளமாகவும் செயல்பட்டு வருகிறது. படையெடுப்பை தங்களது இடத்தில நடத்த அனுமதித்திருந்தாலும் பெலாரஸ் தனது படைகள் எதையும் போரில் ஈடுபடுத்தவில்லை.