#BREAKING: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

Default Image

2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 5-ஆவது முறையாகும். தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டாகும். சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்த பின் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இது அமையும். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டன என கூறினார்.

மேலும், 2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அத்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு, தானியங்கள் வழங்கப்பட்டன என்றும் 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்