இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம்! பிரதமர் மோடி வாழ்த்து.!
எழுச்சி தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படைக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடலோர காவல்படை (ICG) இன்று தனது 47-வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது. இந்த எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துகள் கூறியுள்ளார்.
இது குறித்து மோடி கூறியதாவது, அனைத்து கடலோர காவல்படை வீரர்களுக்கும் இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தின வாழ்த்துக்கள், நமது கடற்கரைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும், இந்திய கடலோர காவல்படை மற்றும் அதன் தொழில்முறை முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.