தன்பாத் தீ விபத்து..! 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் அறிவிப்பு..!

Default Image

ஜார்கண்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்தில் கட்டிடத்தில் இருந்த14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 10 பெண்கள் உட்பட 3 குழந்தைகள் அடங்குவர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தன்பாத் துணை ஆணையர் சந்தீப் சிங் கூறுகையில், தன்பாத்தில் உள்ள ஆஷிர்வாத் டவரின் இரண்டாவது மாடியில் மாலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 14 பேர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார். தீயை அணைக்க சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டிடத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Dhanbad Fire Accident

இந்த சம்பவம் குறித்து ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஹேமந்த் சோரன்,”தன்பாத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்