நடனமாடியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Default Image

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு நடனமாடிய ஜோடிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை. 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும், விதிகளை மீறி நடனமாடிய நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரானில், இஸ்லாமிய  பெண்களுக்கான கடுமையான விதிகளை மீறி ஹகிகி தலையில் முக்காடு அணியவில்லை, அதே சமயம் ஈரானில் பெண்கள் ஆணுடன் கூட பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை.

பொது இடங்களில் நடனமாட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடன வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் இந்த ஜோடிகள் சிக்கியுள்ளனர். அத்துடன் இணையத்தைப் பயன்படுத்துவதற்கும் ஈரானிலிருந்து வெளியேறுவதற்கும் தடை விதித்துள்ளது.

இவர் நடனமாடிய ஆசாதி கோபுரம், 1970 களின் முற்பகுதியில் கடைசி ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சியின் கீழ் திறக்கப்பட்டது,.அப்போது இது ஷாஹ்யாத் (ஷாவின் நினைவாக) கோபுரம் என்று அழைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்