இன்று முதல் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம்!
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன்படி, இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் ஆய்வு செய்கிறார்.
கள ஆய்வில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் திட்ட செயல்பாடுகள் குறித்து நாளை ஆட்சியர்களுடன் விவாதிக்கப்படும். இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலர், துறை செயலர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி முதல்வர் ஆய்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.