விண்வெளித்துறையில் அரசின் மூலதன செலவு 50% குறைந்துள்ளது..! பொருளாதார ஆய்வு தகவல்..!

Default Image

விண்வெளி துறையில் இந்திய அரசின் மூலதன செலவு 50 % சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு (Space technology start-up ecosystem, பல ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதலில் புதிய உயரங்களை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விண்வெளித் துறையில் அரசாங்கத்தின் மூலதனச் செலவு, 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்களின் செலவை, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் மாத செலவுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது.

indian space sector (1)

ஜனவரி 31 அன்று வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கையின் படி, 2021 ஏப்ரல்-நவம்பரில் ரூ.4,000 கோடியாக இருந்த அரசின் மூலதனச் செலவு, 2022-ஆம் ஆண்டில் ரூ.2,000 (48.74%) கோடியாகக் குறைந்துள்ளது. 2023-யில் ஒதுக்கப்படும் பட்ஜெட்டில், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திற்கு (IN-Space) அதிக ஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறது.

indian space sector 3

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இன்-ஸ்பேஸ் நிறுவனத்துக்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டது. புதிய உள்கட்டமைப்புகளை அமைக்க, இன்-ஸ்பெஸ்க்கு நிதியாக ரூ.100 கோடி வழங்கப்பட வேண்டும் என்று ஸ்டார்ட் அப்கள் தெரிவித்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்