ஐபிஎல் வரலாற்றில் சுயநலமற்ற வீரர் என்றால் இவர்தான்! அனில் கும்ப்ளே புகழாரம்.!
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் தன்னலமற்ற வீரர் என்றால் அது எம்எஸ் தோனி தான் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மாற்று அனைத்து வீரர்களாலும் விளையாட்டில் மதிக்கப்படக்கூடிய ஒரு வீரர் என்றால் மகேந்திர சிங் தோனி என்று கூறினால் அது மிகையாகாது. தோனி, ஐபிஎல்-இல் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியும் இதற்காக தனது பயிற்சியையும் தொடங்கிவிட்டார். இது அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் பட்சத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டு செல்கிறது. இந்த நிலையில் முன்னாள் இந்திய கேப்டனான அணில் கும்ப்ளே, தோனி ஒரு சுயநலமற்ற வீரர் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சுயநலமற்ற வீரராக எம்எஸ் தோனியை தான் கருதுகிறேன், கேப்டன் பதவிக்காக பலர் ஆசைப்படும் நிலையில், தோனி அப்பதவியை விட்டுக்கொடுத்தது விலகினார், அவ்வாறு விலகுவது எளிதல்ல. ஹேட்ஸ் ஆஃப்…அவர் எவ்வளவு சுயநலமற்றவர் என்பதை இது காட்டுகிறது என கும்ப்ளே கூறினார்.
மேலும் பல முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களும் மிகவும் தன்னலமற்ற வீரராக தோனியை தேர்வு செய்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெய்ல், ஆர்பி சிங், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் பலர் ஒரு நேர்காணலில் மிகவும் தன்னலமற்ற வீரர் யார் என கேட்கப்பட்ட கேள்விக்கு, அனைவரும் தங்கள் விருப்பமான பெயராக எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
MS Dhoni is undoubtedly the most selfless player of all time ❤️????????#CricketTwitter #india #csk #msdhoni pic.twitter.com/D5H5dk5t5h
— Sportskeeda (@Sportskeeda) January 31, 2023