கடைசி நாளில் அதானி எண்டர்பிரைசஸின் $2.5 பில்லியன் பங்குகள் விற்பனை செய்து சாதனை.!
அதானி எண்டர்பிரைசஸின் ரூ.20,000 கோடி FPO கடைசி நாளில் முழுமையாக சந்தா செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய FPO ஆன, அதானி எண்டர்பிரைசஸின் ஃபாலோ-ஆன் பொது வழங்கல் (FPO) ரூ.20,000 கோடி($2.5 பில்லியன்) பங்குகள், ஏலத்தின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் முழுமையாக பங்குகள் (விற்கப்பட்டு) சந்தா செலுத்தப்பட்டது. நிறுவனம் சாராத முதலீட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, ஏலத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 96.16 லட்சம் பங்குகளை விட மூன்று மடங்கு அதிகமாக பங்குகளை ஏலத்தில் எடுத்தனர்.
நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கான பகுதிகள் முறையே 97% மற்றும் 11% என சந்தா பெற்றன. மும்பை பங்குச்சந்தை தகவல்களின்படி, ரூ.1.28 கோடி பங்குகள் கிட்டத்தட்ட முழுமையாகச் சந்தா(விற்பனையாகியுள்ளன) செலுத்தப்பட்டுள்ளன.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் ஃபாலோ-ஆன் பங்கு விற்பனையானது, ரூ.20,000 கோடி, கடைசி நாளில் முழுமையாக சந்தா செலுத்தப்பட்டுள்ளது. அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அவரது பங்குகள் தொடர்நது சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதானி எண்டர்பிரைசஸ் முழுமையாக சந்தாவை பெற்றுள்ளன.