வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்! – உயர்நீதிமன்றம்
வேலுமணி மனு மீதான விசாரணையை பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 தேர்தலின்போது பல்வேறு தொகுதிகளுக்கு வழங்க ரூ.7 கோடி சேகர் ரெட்டிக்கு வழங்கியதாக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது. 2017-18 நிதியாண்டில் வேலுமணியின் வருமானம் ரூ.7 கோடி என நிர்ணயித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.
வருமான வரித்துறை நடவடிக்கையை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கு தொடுத்திருந்தார். வருமான வரித்துறை நோட்டீசை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், வேலுமணி தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை பிப்.27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.