இடைத்தேர்தல் முடிவு இன்னும் எடுக்கவில்லை… பாஜக விளக்கம்.!

இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம். –  பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.

பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அந்த கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். நாளை மறுநாள் அந்த வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக  இதுகுறித்து இன்னும் யோசனையில் இருக்கிறது. அதே போல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இன்னும் உறுதியான முடிவை கூறவில்லை. இன்று சென்னையில் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை பாஜக முக்கிய நிர்வாகிகள் உடன் நடைபெற்றது.

அது முடிந்ததும் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நிற்க பாஜகவில் இருந்தே நிறைய நபர்கள் வாய்ப்பு கேட்கிறார்கள். ஆனால், அனைத்தும் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து தான் இதனை முடிவெடுப்பார்கள் என கூறினார். மேலும், ஓபிஎஸ் – இபிஎஸ் என பலரும் கலந்து ஆலோசித்து உள்ளனர். இன்னும் 2 நாட்களில் பாஜக நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். பிப்ரவரி 7ஆம் தேதி தான் வேட்புமனு கடைசி தேதி அதற்குள் கூறிவிடுவோம் என கூறினார் பாஜக மாநில முக்கிய நிர்வாகி நாராயண் திருப்பதி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment