டாஸ்மாக்கிற்கு வரி செலுத்தக்கோரி அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை.!
டாஸ்மாக் நிறுவனம் 7,986.32 கோடி வரி செலுத்தக்கோரி, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் வரி செலுத்த தவறியதால் டாஸ்மாக்கிற்கு எதிராக வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்கால தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் 7,986.32 கோடி வரி செலுத்தக்கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. டாஸ்மாக் நிறுவனம் இந்த நோட்டீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை அளித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் 2016-17இல் மாநில அரசுக்கு செலுத்திய 14,000 கோடி ரூபாய் மதிப்புக்கூட்டு வரியும் வரி விதிப்புக்கு உட்பட்டது என வருமானவரித்துறை கூறியிருக்கிறது. ஆனால் மதிப்புக்கூட்டுவரி செலுத்திய பின் வரி செலுத்த தேவையில்லை என டாஸ்மாக் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது.