ரூ.25 கோடி 13 பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிதி! உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,13 பல்கலைக்கழகங்களுக்கு தேவைக்கேற்ப 25 கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதியாக ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டு முதல் 400 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதற்காக 2 கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.