கடலில் பேனா சின்னத்தை வைத்தால் உடைப்பேன் – சீமான் ஆவேசம்!

Default Image

நினைவு சின்னத்தை எதிர்க்கவில்லை, ஆனால் கடலுக்குள் எதற்கு என கருத்துகேட்பு கூட்டத்தில் சீமான் கடும் எதிர்ப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா சின்னம் நிறுவதை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடலுக்குள் பேனா சிலை வைத்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்றும் மெரினா கடலில் பேனா நினைவு சின்னத்தை வைத்தால் உடைப்பேன் எனவும் கூறினார். நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், கடலுக்குள் வைக்க கூடாது. அண்ணா அறிவாலயத்தில் வேண்டுமானால் பேனா நினைவு சின்னத்தை வைத்து கொள்ளுங்கள் என தெரிவித்த சீமான், அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை, பேனா நினைவு சின்னம் அமைக்க நிதி இருக்கா? எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே, பேனா நினைவு சின்னம் வைத்தால் கடுமையான போராட்டம் செய்வோம். இதுகுறித்து மாற்றுக்கருத்து கூறினால் கூச்சல் போடுகிறார்கள் எனவும் விமர்சித்தார். மேலும், மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைப்பதை எதிர்க்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் சீமான். பேனா சிலை அமைக்க ஒருதரப்பு எதிர்ப்பும், மற்றொரு தரப்பு ஆதரவும் தந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal
75th Constitution Day