மதிய உணவில் பிரச்சனை..! 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு..!
ஆந்திராவில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், பல்நாடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். பல்நாடு பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியின் மாணவர்கள் காலை உணவிற்காக கோழி கறியும், மாலை உணவில் கத்திரிக்காயும் சாப்பிட்டுள்ளனர்.
உணவு சாப்பிட்ட பின்பு முதலில் 50 மாணவர்கள் வயிற்றுவலி மற்றும் குமட்டல் ஏற்படுவதாக ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இவர்களையடுத்து மேலும் 50 மாணவர்களும் இதே போன்ற அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் பள்ளியில் இருந்துள்ளனர். மாணவர்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் உடல்நிலை பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்பொழுது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. முதற்கட்ட ஆய்வு அஜீரணக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் மாணவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் இது குறித்த விரிவான அறிக்கை வருவதற்காக பள்ளி நிர்வாகம் காத்திருக்கிறது.