இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் – அண்ணாமலை
டி.ஆர்.பாலு வீடியோ நாளை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும் என அண்ணாமலை பேட்டி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் ‘நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடித்தேன்’ என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசும் வீடியோவை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் வண்ணம் திமுக.,வினர் டி.ஆர்.பாலு பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டதோடு, முழு வீடியோவையும் வெளியிடாமல் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டதாக அண்ணாமலையை விமர்சித்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில், அண்ணாமலை, வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார். திமுக.,வினர் பேசுவதை வெட்டி ஒட்டி பாஜகவை வளர்க்கலாம் என அண்ணாமலை முயற்சிக்கிறார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை அவர்கள், நான் வெளியிட்ட வீடியோவை வெட்டி, ஒட்டவில்லை. அது முழுமையானது. எடிட் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலகவும் தயார். டி.ஆர்.பாலு வீடியோ நாளை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.