இந்த வருடம் 7 திரைப்படம் ரிலீஸ் ஆகப்போகுது… நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சி.!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து ஹன்சிகா சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
திருமணத்தை தொடர்ந்தும் நடிகை ஹன்சிகா பல படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில். திருமண வாழ்க்கையை கொண்டாடிய ஹன்சிகா மீண்டும் படங்களின் படப்பிடிப்புகளில் நடிப்பதற்காக சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது ” ரொம்ப சந்தோசமாக இருக்கிறது சென்னை வந்தது. ஒரு மகள் தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தது எப்படி இருக்குமோ அதே அளவிற்கு ஒரு உணர்வு வருகிறது. இன்று முதல் இயக்குனர் நந்த கோபால் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளேன்.
இந்த வருடம் எனக்கு ரொம்பவே லக்கியான ஆண்டு. இந்தாண்டு நான் நடித்த 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இன்று முதல் தொடர்ந்து 1 மாதம் சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.