கடத்தல் விவகாரம்! காவல்துறை விரைந்து செயல்பட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.!

Default Image

கடத்தல் விவகாரங்களில் FIR பதிவு செய்ய எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

கடத்தல் தொடர்பான விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்வதற்கு எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு , கூறியிருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்தையடுத்து, சைலேந்திர பாபு இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடத்தல் விவகாரங்களில் எஸ்.பி- க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுவந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறையே துரிதமாக நடவடிக்கை எடுக்கலாம், எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்