ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – இன்று முதல் வேட்பு மனு தாக்கல்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்று முதல் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. மனுத்தாக்கல் செய்ய பிப்.7-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 8-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ஆம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.