கூகுள் குரோமின் இன்காக்னிட்டோ மோட்..! புதிய பாதுகாப்புடன் விரைவில்…
கூகுள் குரோமின் இன்காக்னிட்டோ சேவை புதிய பாதுகாப்புகளுடன் வெளியாக உள்ளது.
கூகுள் தனது முன்னணி செயலியான குரோமின் புதிய முக்கியமான பாதுகாப்பு அம்சத்தை வெளிவிட தொடங்கியுள்ளது. இந்த அம்சத்தை ஆன்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டிற்கு இன்னும் சில நாட்களில் கொண்டு வர உள்ளது. இந்த புதிய பாதுகாப்பு அம்சத்தில் குரோமின் மறைமுக செயல்படுகள் நிகழும் பகுதியான இன்காக்னிட்டோ சேவையில் கைரேகையை வைத்து தகவல்களை பாதுகாக்க முடியும்.
ஐஓஎஸ் (iOS) பயனர்களின் குரோமில் இந்த அம்சம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த பாதுகாப்பு அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மேம்பாட்டில் இருந்தது. இறுதியாக ஆண்ட்ராய்டுக்கான குரோமின் மறைநிலை தகவலுக்கான பயோமெட்ரிக் பூட்டை வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
இந்த பாதுகாப்பு அமைப்பு பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் மற்றவர்கள் தங்களின் தகவல்களை நேரடியாகத் திறப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த பாதுகாப்பு அமைப்பு இயக்கத்தில் இருக்கும் பொழுது பயனரின் கைரேகை வைத்தால் மட்டுமே மறைநிலை தகவல்களை அணுக முடியும்.