காஷ்மீர் மக்கள் அன்பு நிறைந்த இதயங்களை தருகிறார்கள்- ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பேச்சு.!
பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் அன்பு நிறைந்த இதயங்களை தருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின், ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் இன்று நிறைவு பெறுகிறது. இந்த நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, காஷ்மீரில் தான் தாக்கப்படலாம் எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால், காஷ்மீர் மக்கள் எனக்கு எறி குண்டுகளை வழங்கவில்லை மாறாக அன்பு நிறைந்த இதயங்களை தந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் நாங்கள் ஜம்மு காஷ்மீரில் நான்கு நாட்கள் யாத்திரையில் நடந்துள்ளோம், ஆனால் பாஜக உறுப்பினர்களால் இங்கு இவ்வாறு நடக்கமுடியாது, அவர்கள் இங்கே வருவதற்கு அஞ்சுகின்றனர். வன்முறையை நடத்தும் அவர்களால் வலியை உணர முடியாது. தனது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூறிய ராகுல், புல்வாமா தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் வலியை புரிந்து கொண்டு, ஒருவரை இழந்த வேதனை தனக்கும் புரியும் என்று மேலும் தெரிவித்தார்.
ராகுல் இந்த விழாவில், பாரம்பரிய காஷ்மீரி ஃபெரான் அணிந்திருந்தார். எனது குடும்பம் மற்றும் மகாத்மா காந்தி எனக்கு பயமில்லாமல் வாழ வேண்டும், அப்படி இல்லையென்றால் அது வாழ்கை இல்லை என கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.