காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சமீபத்திய நிலவரப்படி, வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு 610 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையில், தமிழக்கத்தில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று சென்னை, கடலூர், நாகைப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தெற்கு – தென் மேற்கு திசை நோக்க்கி நகர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி இலங்கையில் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.