பொறையார் போக்குவரத்து பணிமனை கட்டப்பட்டது 1943 ஆண்டா…? அதிர்ச்சி தகவல்….

Default Image

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் போக்குவரத்து பணிமனையில் எட்டு போக்குவரத்து தொழிலாளிகள் தூங்கிக்கொண்டிருந்தபோதுகட்டிடம் இடிந்து சம்பவ இடத்திலேயே 8 பேர் மரணமடைந்து விட்டனர்.1943ம் ஆண்டு அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியரால் திறக்கப்பட்ட கட்டிடம். சுண்ணாம்பு காரையால் கட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த ராமசந்திரன் என்ற பொறியாளர் 3-2-15 அன்று கட்டிடத்தை ஆய்வு செய்து மேற்கண்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கட்டிடஉறுதிக்கு சான்றழித்துள்ளார்.

ஆனால் நேற்று விடியற்காலை 3.45மணிக்கு இந்த துயரம் நடந்து தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரவு பகலாக உழைத்து அரசுக்கு அன்றாடம் வருமானத்தை அரசாங்கத்திற்கு

ஈட்டித்தரும் தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்கு பாதுகாப்பான ஒரு இடத்தை ஏற்படுத்தி தராத அரசின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம்.இந்நிலையில் மூன்று தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் காரைக்கால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்