அதானி குழுமங்களில் முதலீடுகள் தொடர்பாக, எல்ஐசி விளக்கம்.!
அதானி குழுமங்களில் எல்ஐசியின் முதலீடுகள் உரிய தர மதிப்பீடுகள் கொண்டவை என எல்ஐசி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதானி குழுமங்களில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், எல்ஐசி நிறுவனம் அந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருக்கிறது. அதானி குழுமங்களில், எல்ஐசி நிறுவனத்தின் மொத்த முதலீடுகள் ஜனவரி-27 நிலவரப்படி, 56,142 கோடி எனவும், எல்ஐசியின் ஒட்டுமொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடி எனவும் எல்ஐசி நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளது.
தவறான தகவல்கள் பரவிவருகின்ற நிலையில் எல்ஐசி நிறுவனம், தற்போது இந்த விளக்கம் அளித்துள்ளது. மேலும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையின் படி தான் அதானி குழுமங்களில், எல்ஐசி முதலீடு செய்துள்ளதாக விளக்கம் கூறியுள்ளது. மேலும் அதானியில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும், உரிய தர மதிப்பீடுகள் கொண்டவை என்று எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.