பொங்கல் பரிசு: 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை – கூட்டுறவுத்துறை அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை அறிக்கை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணம், இத்துடன் சேர்த்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழ்மா முழுவதும் நியாயவிலை கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டது. பொங்கல் பரிசு ரூ.1,000-ஐ பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என இருந்துவிட்டனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசான 1,000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என்றும் 4.40 லட்சம் பேர் ஆயிரம் ரூபாயை வாங்காததால் ரூ.43.96 கோடி பணம் திரும்பி வந்துள்ளது எனவும் கூட்டுறவுத்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.