பிபிசி ஆவணப்படத்தை முடக்கிய மத்திய அரசு – இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்..!
பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு பிப்.6 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது அந்த மாநில முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தது.
இந்த படத்தை மத்திய அரசு இந்தியாவில் வெளியிட தடை விதித்தது. ஆனால் தடையை மீறி நாட்டில் சில பல்கலைக்கழகங்களில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவால் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தி இருந்த நிலையில், இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிப்ரவரி 6-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.