சென்னை மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனி தொடங்கும்.! மேயர் பிரியா அறிவிப்பு.!
சென்னை மாமன்ற கூட்டம் தொடங்கும் முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்ப செய்த பின்னர் தான் தொடங்கும் என சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வார்டு உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாமன்ற கூட்டத்தில் முக்கியமான ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளளது. அதாவது அடுத்த மாமன்ற கூட்டம் தொடங்கும் முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்ப செய்து தான் தொடங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சியில் மதிமுக கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் கூறுகையில், ஜனவரி மாதம் இறுதியில் மாமன்ற கூட்டம் நடைப்பெற்றது. இதில் எனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் நான் பேசுகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் பற்றி கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தேன்.
அது பற்றி அவர்கள் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்கள். அதற்கு அனுமதி இல்லை என்றால், ஆளுநர் தரப்பில் மதிமுக சார்பில் ஆளுநர் செய்கைக்கு நான் கண்டனத்தை பதிவு செய்கிறேன் என கூறினேன். என்றார். மேலும், வார்டு மேம்பாட்டு நிதியைஉயர்த்தித்தர கோரினேன். அதற்கும் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்கள். என மதிமுக வார்டு கவுன்சிலர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அடுத்ததாக, சென்னை மாமன்ற கூட்டம் தொடங்கும் முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பி தொடங்க கேட்டுக்கொண்டேன். இனி அவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பி தொடங்கும் என மேயர் பிரியா உறுதியளித்தார். அதற்கு மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார்.