பாஜக கூட்டணி கூட்டம் – ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு.
நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுகவின் மக்களவை குழு தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்-ன் மகன் எம்.பி. ரவீந்திரநாத்திற்க, பிரகாலத் ஜோஷி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை சர்ச்சை நீடித்து வரும் நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக மத்திய அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஓபிஎஸ்-ன் மகன் எம்.பி. ரவீந்திரநாத் பங்கேற்றுள்ள நிலையில், தற்போது பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கவும் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.