ராட்சத ராட்டினத்தில் சிக்கிய சிறுமியின் தலைமுடி..! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!
ராட்சத ராட்டினத்தில் சிறுமியின் தலைமுடி சிக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ராட்சத சக்கரத்தை ஓட்டியபோது, அதில் 16 வயது ஸ்ரீவித்யா என்ற சிறுமி ஒருவர் இருந்துள்ளார். ராட்சத சக்கரம் சுற்றியபோது, அந்த சிறுமியின் தலைமுடி அந்த சக்கரத்தில் சுற்றியுள்ளது.
இதில் அந்த சிறுமியின் சிறுமியின் தலைமுடி சிக்கி, சில நொடிகளில் உச்சந்தலையில் ஒரு அடுக்கு கிழிந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக மைசூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், உச்சந்தலையில் விக் போல் வெளியே வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாண்டியா மாவட்டம் ஓசபுதனூரை சேர்ந்த ராட்சத சக்கரத்தின் உரிமையாளர் ரமேஷை ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் போலீசார் கைது செய்தனர்.